விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்று மனதில் இருந்த குழப்பங்கள் எல்லாம் தீர்ந்துவிடும். எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். ஊழியர்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்வது நல்லது. சின்ன சின்ன குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும்.

நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். உறவினர்களிடம் பேசும் போதும் கவனமாக இருங்கள். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். பணவரவு சீராக அதிகரிக்கும். இன்று பெண்களுக்கு கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். காரியங்களை அற்புதமாக செய்து முடிக்க முடியும். பெண்கள் இன்று அனைவரையும் நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள்.

இன்று மாணவர்கள் சிந்தனையை ஒருநிலைப்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். படிப்பில் அக்கறை கொள்ள வேண்டும். பெற்றோர்கள் சொல் கேட்டு நடக்க வேண்டும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 4, 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை