தனுசு ராசி அன்பர்களே,

இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். வீடு மாற்றம் இடமாற்றம் மகிழ்ச்சியை கொடுக்கும். வரவு திருப்தியைக் கொடுக்கும். பணியில் ஏற்பட்ட தொய்வு விலகி செல்லும். சக நண்பர்களிடம் சிரித்து பேசி மகிழ்வீர்கள். பல நாட்களாக நடைபெறாமல் இருந்த காரியம் மீண்டும் நடைபெறக்கூடும். இன்று மன நிறைவடையும்.

உயர்வான நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். எந்த ஒரு விஷயத்திற்கும் தீர்வு காண முடியும். முன்னேற்றத்திற்கு உண்டான பாதைகளை வழி வகுத்துக் கொள்வீர்கள். உழைப்பால் உயர்ந்து கொண்டிருப்பீர்கள். இன்று பெண்களுக்கு சக பெண்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

ஆன்மீக சுற்றுலா செல்லும் வாய்ப்பு உள்ளது. இன்று மாணவர்கள் பொறுப்பாக காணப்படுவீர்கள். கல்விக்கான பொருளாதாரத்தை உயர்த்தி கொள்வீர்கள். வரும் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: ஐந்து மற்றும் ஆறு

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்