விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்று கண்டிப்பாக நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும். காரியங்கள் அபிவிருத்தி ஆகும். நேர்மையுடன் நடந்து கொள்வீர்கள். சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். செலவுகள் மட்டும் ஒரு பக்கம் அதிகரிக்கும். உறவினர்களிடையே பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மனக்கசப்புகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் அமைதியாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

தெய்வ அனுகூலம் ஏற்படும். பொருளாதாரம் சீராக உயரும். சிறப்பான வாழ்க்கை அமையும் சூழல் உள்ளது. காரிய அனுகூலம் உள்ளது. செய்யும் முயற்சிகளில் தடை வந்தாலும் அதை முறியடித்து வெற்றி பெற முடியும். கணவன் மனைவி இருவரும் அன்பை மட்டும் வெளிப்படுத்த வேண்டும். பெண்கள் ஆழ்ந்த உறக்கத்தில் காணப்படுவீர்கள். நிதி தொடர்பான விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.

கேலி கிண்டல் பேச்சுகளை தவிர்த்து விடுங்கள். மாணவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். கல்வியில் முழு அக்கறை கொள்ளுங்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். சக மாணவர்களுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: ஐந்து ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்