ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்நாடு அருகே போலராஜு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வருவாய்த்துறையில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த மாதம் உடல் நலக்குறைவினால் இறந்துவிட்டார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மகளும், கோபி கிருஷ்ணா (36), துர்கா ராமகிருஷ்ணன் (29) என்ற மகன்களும் இருந்துள்ளனர். இவருடைய தந்தைக்கு கிட்டத்தட்ட 40 லட்ச ரூபாய் பென்ஷன் வரும் என்று அவர்கள் நினைத்துள்ளனர். அதோடு அரசு வேலையில் இருக்கும் போது உயிரிழந்ததால் குடும்பத்தில் ஒருவருக்கு அந்த பணியும் கிடைக்கும். இதன் காரணமாக கிருஷ்ணவேணி தன் தம்பி இருவரும் பணம் மற்றும் அரசு வேலையை எடுத்துக் கொள்வார்கள் என்று நினைத்துள்ளார்.
அதோடு தந்தையின் சொத்துக்களையும் அவர்கள் வைத்துக் கொள்வார்கள் என்று நினைத்தார். இதன் காரணமாக கிருஷ்ணவேணி குடிபோதையில் கடந்த 10ம் தேதி தன்னுடைய மூத்த சகோதரன் கோபிகிருஷ்ணாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதேபோன்று இளைய சகோதரனை ஒரு கால்வாயில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். இது கிருஷ்ணவேணிக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒருவருடன் தொடர்பு இருக்கலாம் எனவும் அவருடைய ஆதரவால் இருவரையும் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கூறிய நிலையில் கிருஷ்ணவேணியை கைது செய்துள்ளனர். இருவரின் உடல்களையும் தற்போது காவல்துறையினர் தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
