ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாகூர் மாவட்டத்தில் 7 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமி அரையாண்டு தேர்வு எழுதிவிட்டு பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். பேருந்தில் இருந்து இறங்கி வீட்டை நோக்கி சிறுமி நடந்து சென்றார். அப்போது ஒரு வாலிபர் சிறுமியிடம் பேச்சு கொடுத்து நைசாக அவரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் ரத்த காயங்களுடன் சிறுமி மயங்கி கிடந்தார். இதற்கிடையே சிறுமியை காணாமல் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்த நிலையில் சுயநினைவு திரும்பிய நிலையில் சிறுமி கண் விழித்து வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர்.