வித்தியாசமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் குறுக்கே நின்ற ஒரு நபரை யானை ஒதுங்கி செல்லுமாறு சைகை காண்பித்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் யானை செல்லும் வழியில் ஒரு நபர் நின்று கொண்டிருக்கிறார். அவருக்கு பின்னால் இருந்து வந்த யானை அவரை ஒதுங்கி செல்லுமாறு சைகை செய்கிறது.
உடனே யானையைப் பார்த்து அந்த நபர் பயத்துடன் அங்கிருந்து ஓடி வருகிறார். அதன் பிறகு அந்த யானையும் அங்கிருந்து நகர்ந்து செல்கிறது. அந்த வீடியோ 5 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. யானை தாக்காமல் சைகை காண்பித்ததை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
Elephant gently reminding the human that he is in the way. pic.twitter.com/Ft6P7ICUf8
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) December 14, 2024
