சாதாரண மனிதர்களின் வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் டெபாசிட் ஆகும் சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஒரு டீ கடை நடத்துபவரின் மனைவியின் வங்கி கணக்கில் திடீரென 999 கோடி பணம் டெபாசிட் ஆகியுள்ளது. அதாவது டெல்லியில் உள்ள ஒரு பகுதியில் பிரபாகரன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவியின் வங்கி கணக்கில் திடீரென 999 கோடி ரூபாய் பணம் டெபாசிட் ஆகியுள்ளது. இதை நினைத்து அவர்கள் மிகவும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
ஆனால் அந்த ஆச்சரியம் முடிவடைவதற்குள் வங்கிக் கணக்கில் இருந்த பணம் மீட்கப்பட்டது. அதாவது வங்கி கணக்கில் இருந்து தவறுதலாக பிரபாகரனின் மனைவி கணக்கிற்கு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பணத்தை வங்கி நிர்வாகம் மீட்டது. அதே சமயத்தில் அவரின் மனைவியின் வங்கி கணக்கையும் முடக்கி விட்டனர். இதன் காரணமாக அவர்கள் பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக அவர்கள் வங்கியில் புகார் கொடுத்துள்ளனர்.
