கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் 69 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி மாற்றுத்திறனாளி. சம்பவம் நடைபெற்ற அன்று மூதாட்டி பூ பறிப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அந்த மூதாட்டியின் சகோதரி அவரை தேடி சென்றார். அப்போது வீட்டிற்கு அருகில் ஆடைகள் கிழிந்து உடலில் காயங்களுடன் மூதாட்டி சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது 34 வயது உடைய தௌபீக் என்பவர் சட்டை இல்லாமல் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அவர்தான் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் மூதாட்டியை தௌபீக் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
