பாலிடெக்னிக் மாணவர்கள் தண்ணீரோ, வேதிப்பொருட்களோ இல்லாமல் ஒலியைப் பயன்படுத்தித் தீயை அணைக்கும் கருவியை உருவாக்கியுள்ளனர். இந்த வியக்கத்தக்க கண்டுபிடிப்பு குறித்து, மாணவர்கள் நடத்திய நேரடிச் செயல்முறை விளக்கம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. எந்த ஒரு சிக்கலான வேதிப்பொருட்களும் இன்றி, சவுண்ட் வேவ்ஸ் மூலம் தீயை அணைக்கும் இந்தத் தொழில்நுட்பம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

​இந்தக் காணொளி தற்போது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சூழலில், மாணவர்களின் தனித்துவமான இந்த முயற்சிக்குச் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். எதிர்காலத் தீயணைப்புத் துறையில் இத்தகைய சூழல் நட்பு தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பலரும் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.