கோச்சிங் சென்டரில் படிக்கும்போது தூங்கிய காரணத்திற்காக, ஒரு மாணவியை ஆசிரியர் செருப்பால் அடிக்கும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த மாணவியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வக்கிரமான முறையில் சித்திரவதை செய்யும் காட்சிகள் பார்ப்போரின் நெஞ்சைப் பதற வைக்கிறது. ஆசிரியர் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் ஒரு மிருகத்தின் முகம் இதன் மூலம் அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது.

​ஒரு சிறிய தவறுக்காக மாணவியின் சுயமரியாதையை இப்படிச் சிதைப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அப்பட்டமான ரவுடித்தனமாகும். இத்தகைய வக்கிர புத்தி கொண்ட நபரை உடனடியாகக் கைது செய்து கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் சிறையிலடைக்க வேண்டும். இனி ஒருவன் இது போன்ற செயலில் ஈடுபட நினைத்தாலே நடுக்கம் எடுக்கும் அளவிற்குத் தண்டனை மிகக் கடுமையாக அமைய வேண்டும்.