சீனாவில் பெட்ரோல் பங்க் ஒன்றிற்கு வந்த டிரைவர் ஒருவர், எரிவாயு நிரப்பிய பிறகு ஊழியரிடம் பணத்தை முறையாகக் கொடுக்காமல் தரையில் வீசி எறிந்துவிட்டுச் சென்றுள்ளார். இந்த அலட்சியமான செயலையும், ஊழியரை அவமானப்படுத்தும் விதமாக அவர் நடந்துகொண்டதையும் காட்டும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவின. பணத்தைக் கொடுத்த விதம் பலரது கண்டனங்களுக்கு உள்ளானது.
China BANNED This Driver From All Gas Stations Nationwide After Viral Video pic.twitter.com/0uTfIr9xCr
— Clip Master (@Clip_Master__) March 21, 2026
இந்த வைரல் வீடியோவை பார்த்த சீன அதிகாரிகள், அந்த நபரின் செயலுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். இனி அந்த நபர் சீனாவின் எந்தப் பெட்ரோல் பங்கிலும் எரிவாயு நிரப்பக் கூடாது என்று நாடு தழுவிய அளவில் அதிரடித் தடை விதித்துள்ளனர். பணிபுரியும் ஊழியர்களைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்ற பாடத்தை உணர்த்தும் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
