கடலூர் மாவட்டத்தில் உள்ள சில்லாங்குப்பத்தில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்மாபொண்ணு(84) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று காலை அம்மா பொண்ணு ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற ரயில் மூதாட்டி மீது மோதியது.

இதனால் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.