திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு விசேஷ நாட்களான கிருத்திகை, சஷ்டி போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில் பத்தாம் நாள் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்தும், அழகு குத்தியும் முருகனை வந்து தரிசித்து செல்கின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் சுமார் ஆறு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். கொடி இறக்கத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.