நிதானமிழந்து தண்டவாளத்தில் படுத்திருந்த குடிபோதை நபரை, ரயில் வருவதற்கு சில நொடிகளுக்கு முன் காவலர் ஒருவர் சாமர்த்தியமாக காப்பாற்றிய பதறவைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள பிர்லா நகர் ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மதுபோதையில் இருந்த ஒரு நபர், ரயில்வே தண்டவாளத்தின் நடுவே படுத்துக் கிடந்ததைக் கண்ட ரயில்வே பாதுகாப்புப் படை காவலர், நிலைமையை உணர்ந்து உடனடியாக தண்டவாளத்தில் குதித்தார். அதிவேகமாக ரயில் வந்து கொண்டிருந்த போதிலும், தனது உயிரைப் பொருட்படுத்தாமல் அந்த நபரை தண்டவாளத்திலிருந்து அவர் வெளியே இழுத்துப் போட்டார்.

“>

இதனால் அவர் அந்த நபரை மீட்ட அடுத்த சில நொடிகளில் ரயில் அந்த இடத்தைக் கடந்து சென்றது. காவலரின் இந்த மின்னல் வேகச் செயலால் ஒரு உயிர் நூலிழையில் காப்பாற்றப்பட்டது. இந்த துணிச்சலான செயலைப் பாராட்டி, சம்பந்தப்பட்ட காவலருக்குப் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், குடிபோதையில் இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.