சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு சிறிய குழந்தை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருக்கும்போது, திடீரென வந்த ஒரு குரங்கு மின்னல் வேகத்தில் குழந்தையின் கையைப் பிடித்து இழுத்துச் செல்ல முயல்கிறது. எதிர்பாராத இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்த குழந்தை அலறுகிறது. அங்கிருந்தவர்கள் உடனடியாக விரைந்து வந்து குரங்கை விரட்ட முயன்றனர்.

இந்நிலையில் பொதுவாக மனிதர்களைக் கண்டால் ஓடிவிடும் குரங்குகள், இந்தச் சம்பவத்தில் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டது காண்போரை உறைய வைத்துள்ளது. சுற்றியிருந்தவர்கள் குரங்கைத் தடியால் அடித்தும், சத்தம் போட்டும் விரட்ட முயன்றபோதிலும், அந்த குரங்கு குழந்தையை விடாமல் நீண்ட தூரம் தரதரவென இழுத்துச் சென்றது.

“>

மேலும் பெரும் போராட்டத்திற்குப் பிறகு, அங்கிருந்தவர்களின் தீவிர முயற்சியால் குரங்கு குழந்தையை விட்டுவிட்டுத் தப்பி ஓடியது. அதிர்ஷ்டவசமாக குழந்தை பெரிய காயங்களின்றி மீட்கப்பட்டாலும், இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளைத் தனியாக விட வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.