தஞ்சாவூரில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்காக, கட்சித் தலைமை அதிரடியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வேலூர் கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்புகளைத் தொடர்ந்து, தஞ்சை கூட்டத்தை மிகக் கட்டுக்கோப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ள விஜய், சில ‘கம்பல்சரி’ ரூல்ஸ்களைப் போட்டுள்ளார். குறிப்பாக, க்யூஆர் (QR) கோடு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி, கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்களுக்குத் தடை என லிஸ்ட் நீளுகிறது. ட்ரோன் பறக்க விடக் கூடாது, வாகனங்களைப் பின்தொடரக் கூடாது எனத் தொண்டர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் பறந்துள்ளது.

​அதே சமயம், வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு நிழற்குடை, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளையும் தவெக தலைமை பக்காவாக ஏற்பாடு செய்துள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க, ஒதுக்கப்பட்ட இடங்களில் 80% பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. “கட்சி ஒழுங்கு தான் முக்கியம்” என்பதில் விஜய் மிக உறுதியாக இருப்பதை இந்த அறிவிப்புகள் காட்டுகின்றன.