டெல்லி இளம் பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி டெல்லியில் உள்ள கஞ்சவாலா பகுதியில் நிர்வாக கோலத்தில் இளம் பெண் ஒருவர் 13 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரை பிடித்து காரில் இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளனர். இந்நிலையில் சுமார் 400-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் அஞ்சலியுடன் அவரது தோழி இருந்ததை கண்டறிந்தனர். தற்போது நடைபெற்ற விசாரணையில் மிகப்பெரிய ஏமாற்று வேலை நடைபெற்றுள்ளது தெரியவந்தது.

அதாவது இந்த விபத்து நடைபெற்ற போது கார் ஓட்டியதாக கைது செய்யப்பட்ட தீபக் என்பவர் காரிலே இல்லை என்பதும் அவர் தன்னுடைய வீட்டில் இருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. விபத்து நடைபெற்ற போது காரை அமித் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாத காரணத்தினால் அவரது நண்பரான தீபக்கை கார் ஓட்டியதாக பொய் சொல்ல கூறியுள்ளார். அதற்கு தீபக்கும் ஒப்புக்கொண்டது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தீபக்கின் மொபைல் அழைப்புகளை சோதனை செய்தபோது  சம்பவதன்று  அவர் வீட்டில் இருந்தது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் இந்த சம்பவம் வெளியாகி உள்ளது. மேலும் தவறான தகவல் கொடுத்த 6-வது குற்றவாளியான அசுதோஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஐந்து பேரும் அசுதோஸிடம் கடன் வாங்கி காரை ஓட்டியுள்ளனர். மேலும் அஞ்சலி மரண வழக்கில் நேரில் பார்த்த ஒரே சாட்சி நிதி என்ற பெண் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவர் ஏற்கனவே போதை பொருள் வழக்கில் கைதாகி உள்ளார் என்று அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது. தற்போது நிதி ஜாமினில் வெளியே வந்துள்ளார் என போலீசார்  கூறியுள்ளனர். மேலும் தெலுங்கானாவில் இருந்து ரயிலில் கஞ்சா கொண்டு வருவதற்காக கடந்த டிசம்பர் 6, 2022 அன்று ஆக்ரா ரயில் நிலையத்தில் நிதி கைது செய்யப்பட்டுள்ளார். நிதியுடன் சமர் மற்றும் ரவி என்ற சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் போது அஞ்சலியுடன் இருந்த நிதி அஞ்சலி குடிபோதையில் இருந்ததாக ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.