இந்திய பிரதமர் மோடி வாரணாசியில் கங்கா விலாஸ் என்று சொகுசு கப்பலை வருகிற 13-ஆம் தேதி காணொளி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த சொகுசு கப்பல் வாரணாசியில் இருந்து கிளம்பி பாட்னா நகரை சென்றடைந்து அங்கிருந்து கொல்கத்தாவுக்கு செல்லும். அதன் பிறகு சொகுசு கப்பல் வங்காளதேசத்திற்கு சென்று அங்கிருந்து மீண்டும் இந்தியா திரும்பும். இந்த சொகுசு கப்பல் பயணம் அசாமில் உள்ள திருப்கார் நகரில் முடிவடையும். இந்நிலையில் சொகுசு கப்பலில் 80 பயணிகள் வரை பயணம் செய்யலாம்.
இந்த சொகுசு கப்பல் உலக பாரம்பரிய தளங்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நின்று செல்வதோடு, தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் வழியேயும் கடந்து செல்லும். இந்த கப்பல் மொத்தம் 4000 கிலோமீட்டர் தூரத்திற்கு செல்லும் நிலையில், வெளிநாட்டு பயணிகளும் கப்பலில் பயணம் செய்வார்கள். மேலும் இந்திய சுற்றுலாவை பற்றி உலக மக்களிடையே தெரியப்படுத்தும் விதமாகவும், சுற்றுலா வாசிகளை கவரும் வகையிலும் இந்த கப்பல் பயணம் அமையும் என்று கூறப்படுகிறது.