இந்தியத் திருமண வீடுகளில் நடக்கும் கலாட்டாக்கள் எப்போதுமே சுவாரசியமானவை. அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ பலரையும் சிரிக்க வைத்துள்ளது. ஒரு திருமண வீட்டில் பிளிங்கிட் மூலம் ₹2,000 மதிப்பிலான பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டன.

டெலிவரி செய்ய வந்த ஊழியர் சில்லறை கேட்டபோது, அங்கிருந்த குடும்பத்தினர் அவரிடம் சாதாரண பணமாக கொடுக்காமல், திருமண விசேஷங்களில் பயன்படுத்தப்படும் ₹2,100 மதிப்புள்ள பணமாலையை அப்படியே அவர் கழுத்தில் போட்டுள்ளனர்.

“எங்கள் வீட்டில் கல்யாணம் நடக்கிறது, அதனால் இந்த மாலையையே எடுத்துக் கொள்ளுங்கள்” என்று விளையாட்டாகச் சொல்லி அவர்கள் பணத்தைக் கொடுத்துள்ளனர். இந்த எதிர்பாராத வரவேற்பைப் பார்த்த அந்த ஊழியர், சிரித்துக் கொண்டே அந்த பணமாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டு பணத்தைப் பெற்றுக்கொண்டார்.

அங்கிருந்தவர்கள், “மாலையில் இருக்கும் பணத்தை நீங்களே ஒவ்வொன்றாகப் பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள், எங்களுக்குத் திருமண வேலைகள் அதிகமாக இருக்கிறது” என்று கிண்டலாகச் சொல்ல, அந்த இடமே சிரிப்பொலியால் நிறைந்தது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே வைரலானது.

 

View this post on Instagram

 

A post shared by Bhavya Shridhar (@shridhar_bhavya7)

“>

இதைப் பார்த்த நெட்டிசன்கள், “அந்த எக்ஸ்ட்ரா ₹100 பணத்தைப் பிரித்து எடுப்பதற்கான கூலி” என்றும், “நிஜமான திருமண சீசன் தருணம் இதுதான்” என்றும் ஜாலியாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.