புதிதாக வாங்கிய ஐபோன் 17-ஐ அன்வாக்சிங் செய்தபோது, பெட்டியிலிருந்து எடுத்த அடுத்த நொடியே கீழே போட்டு உடைத்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஷி சிங்லா என்ற பெண் பிளிங்கிட்  செயலியில் ஆர்டர் செய்த தனது புதிய போனை மிகுந்த ஆவலுடன் வீடியோ எடுத்துக்கொண்டே பிரித்தார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த போன் அவரது கையில் இருந்து நழுவி கீழே விழுந்தது. இதனை அவரே கிண்டலாக, “பிளிங்கிட் டெலிவரி வேகமாக இருந்தது, ஆனால் போன் விழுந்தது அதைவிட வேகமாக இருந்தது” எனப் பதிவிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “ஐபோன் வைத்திருப்பவர்கள் பயப்படும் சத்தம் இதுதான்” என்றும், “இதைக் கேட்கும்போதே என் இதயம் வலிக்கிறது” என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

முன்னதாக தனது பழைய போன் தொலைந்துவிட்டதால், சில காலம் ஆண்ட்ராய்டு போனைப் பயன்படுத்திய அந்தப் பெண், மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த ஐபோனை வாங்கியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ashi Singla (@ashixsingla)

“>

போன் விழுந்தாலும், தனக்குத் தேவையான நல்ல வீடியோ கன்டென்ட் கிடைத்துவிட்டது என அவர் வேடிக்கையாகத் தெரிவித்துள்ளார்.