அரியானா மாநிலத்தில் உள்ள பிவானி மாவட்டத்தில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பெண் உயிரியல் ஆசிரியரின் நாற்காலியில் வெடிகுண்டு வைத்துள்ளனர். அதாவது கடந்த வாரம் ஆசிரியர் மாணவர்களை கண்டித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த மாணவர்கள் youtubeபை பார்த்து வெடிகுண்டு தயாரித்துள்ளனர்.
பின்னர் அதனை வகுப்பறையில் ஆசிரியர் அமரும் நாற்காலியின் கீழ் வைத்தனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்தவுடன் வெடிகுண்டை வெடிக்க செய்தனர். அதிர்ஷ்டவசமாக ஆசிரியர் காயம் இன்றி உயிர்த்தப்பினார். இந்த சம்பவத்தின் காரணமாக 13 மாணவர்களை அரியான காவல் துறை ஒரு வாரத்துக்கு பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
