அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தரவு பகுப்பாய்வு நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வில், உலக அளவில் அதிக ஆதரவு பெற்ற தலைவராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். மார்ச் 2 முதல் 8 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், பிரதமர் மோடி 68 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளார்.
சுவிட்சர்லாந்து ஜனாதிபதி கய் பார்மலின் மற்றும் தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங் ஆகியோர் தலா 62 சதவீத ஆதரவுடன் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். உள்நாட்டில் அவருக்கு இருக்கும் செல்வாக்கும், சர்வதேச அளவில் வளர்ந்து வரும் அங்கீகாரமும் அவரை மற்ற பெரிய நாடுகளின் தலைவர்களை விட முன்னணியில் நிறுத்தியுள்ளன.
மற்ற நாடுகளின் தலைவர்களைப் பொறுத்தவரை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 39 சதவீத ஆதரவையும், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் 24 சதவீத ஆதரவையும் பெற்றுள்ளனர். இந்த வரிசையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் மிகக் குறைந்த அளவில் 17 சதவீத ஆதரவை மட்டுமே பெற்றுப் பின்தங்கியுள்ளார்.
குறிப்பாக, அவருக்கு 75 சதவீத மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. உலகளாவிய பொருளாதார நாடுகளின் தலைவர்களுடன் ஒப்பிடும்போது பிரதமர் மோடி தொடர்ந்து தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.
