“பிரதமர் மோடி உலக நாடுகளுடன் AI தொழில்நுட்பத்தில் பெரிய ஒப்பந்தங்களை போட்டுட்டு இருக்காரு. டிரம்ப் மற்றும் ஐரோப்பிய நாடுகளே வியக்கும் அளவுக்கு இந்தியா உயர்ந்துட்டு இருக்கு. ஆனா, இங்க இருக்கிற திமுகவால் அவங்க கூட இருக்கிற கூட்டணிக் கட்சிகளுடனே இன்னும் ஒரு ஒப்பந்தத்தைக் கூடப் போட முடியல” எனத் தமிழிசை சௌந்தரராஜன் செம நக்கலாக விமர்சித்துள்ளார்.
உலக அளவிலான அரசியலோடு உள்ளூர் கூட்டணிக் குழப்பத்தை ஒப்பிட்டு அவர் பேசியது, இப்போது அரசியல் களத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. “மோடி உலகத்தையே கையில் பிடிக்கும்போது, திமுக தன் கூட்டணியைக் கூடக் கட்டிப் பிடிக்க முடியாமல் தவிக்குது” என்பதே தமிழிசையின் இந்த அதிரடித் தாக்குதலின் சுருக்கம்.
