அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த மாணிக்கராஜ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததால் அந்த கட்சியிலிருந்து விலகினார். ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளாத நிலையில் திமுகவில் இணைவதாக செய்தி வந்ததை தொடர்ந்து டிடிவி தினகரன் அவரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கினார். இந்த நிலையில் இன்று அறிவாலயம் சென்ற அவர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

அவர் இது தொடர்பாக பேட்டி கொடுக்கும்போது அமமுக கட்சியில் அதிருப்தியில் இருக்கும் பலர் இன்னும் திமுகவில் இணைவார்கள் என்று கூறினார். இந்த நிலையில் அமமுக கட்சியின் 3 மாவட்ட செயலாளர்கள் தற்போது திமுகவில் இணைந்துள்ளனர். அதன்படி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் வினோத், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஸ்டெல்லஸ், கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர் ரத்னராஜ் ஆகிய மூவரும் திமுகவில் இணைந்தனர். மேலும் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் இப்படி விலகி வருவது டிடிவி தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது ‌