திருவாரூர் மாவட்டத்தில் அமமுக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். சேலம் இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அவர்கள் தங்களை அதிமுக கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
அதிமுக கட்சியில் புதிதாக இணைந்தவர்களை அந்த கட்சியின் கொடியை போர்த்தி எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றார். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே பல அமமுக நிர்வாகிகள் அதிமுக கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
