பாமக கட்சியில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் அன்புமணியை ராமதாஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார். இருப்பினும் பாமக கட்சியின் தலைவர் நான்தான் என்று அன்புமணி கூறி வரும் அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அன்புமணியை பாமக கட்சியின் தலைவராக அங்கீகரித்துள்ளது. இது ராமதாஸ் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. தவறான ஆவணங்களை ஏற்று அன்புமணியை தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டெல்லி ஜந்தரில் வருகிற 4-ம் தேதி தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டம் நடக்கும் எனவும் ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.