உத்தரப்பிரதேச மாநிலம், பஸ்தியில் நேற்று முன்தினம்  இரவு நடந்த ஓர் அபாயகரமான சம்பவத்தின் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அயோத்தியில் இருந்து பஸ்தி நோக்கி வந்துகொண்டிருந்த கோரக்பூர் டிப்போவுக்குச் சொந்தமான அரசுப் பேருந்து ஒன்றின் பின்பக்கத்தில், ஓர் இளைஞர் எந்தப் பிடிப்பும் இல்லாமல் ஒட்டிக்கொண்டு பயணம் செய்தார்.

அவர் தனது உயிரைப் பணயம் வைத்து செய்த இந்தக் ‘கடுமையான சாகசத்தை’ அவ்வழியாகச் சென்ற ஒருவர் காணொலி எடுத்து இணையத்தில் பதிவேற்றினார். இந்தக் காணொலியைப் பார்த்த பலரும் அந்த இளைஞரை ‘ஸ்பைடர் மேன்’ என்று செல்லப்பெயரிட்டு அழைத்து, “இன்றுடிக்கெட் வாங்க காசு இல்லையோ” என்று கிண்டலடித்து வருகின்றனர்.
<a href=”http://

“>
பேருந்தின் வேகத்தில் ஒரு சிறிய தடுமாற்றம் ஏற்பட்டிருந்தாலும் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பதால், இது வேடிக்கைக்குரிய விஷயமாக இருந்தாலும், இதுபோன்று உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாகசங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற எச்சரிக்கையையும் இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.