டாஸ்மாக் வருமானம் தமிழக அரசின் வருவாய்களில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இவ்வாறு அதிக வருமானம் ஈட்டும் டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்படும். இந்நிலையில் 2021-2022ல் ரூ.36,050 கோடியாக இருந்த டாஸ்மாக் வருவாய், 2022-2023ல் ரூ. 44,098 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ரூ.8.047 கோடி அதிகரித்துள்ளது. இந்த தகவலை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.50,000 கோடியாக இருக்குமென தமிழக நிதித்துறை செயலர் நா.முருகானந்தம் கடந்த மாதம் கூறியிருந்தார்.