ரிலையன்ஸ் ஜியோ மொபைல் டேட்டா சேவைகள் மட்டுமல்லாமல் பிராட்பேண்ட் சேவைகளையும் வழங்கி வருகிறது. JIO பைபர் என பெயரிடப்பட்ட பிராட்பேண்ட் பிளான்க்ள் ப்ரீபெய்ட், போஸ்ட் பெய்ட் என 2 வகை சேவைகளை வழங்குகிறது. அதாவது, அன்லிமிடெட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி ஆகும். OTT பலன்கள் என பல சேவைகளை வழங்குகிறது. ரூ.399 துவங்கி 1 ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை திட்டங்களை கொண்டு உள்ளது. 1 மாதம், 3 மாதம், 1 வருடம் என பயனாளர் வசதிக்கு ஏற்றவாறு திட்டங்களை வழங்குகிறது. இந்த நிலையில் JIO பைபர் 3 மாத திட்டம் பற்றி தெரிந்துகொள்வோம்.

இத்திட்டம் 90 நாள் வேலிடிட்டி, அப்லோட் மற்றும் டவுன்லோட் ஆகிய இரண்டிற்கும் 30 எம்பிபிஎஸ் இணையவேகம், அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால் வசதிகளை வழங்குகிறது. அன்லிமிடெட் டேட்டா எனிலும் மாதம் 3.3TB வரையிலும் வழங்குகிறது. இது பல பேருக்கு போதுமானதாக இருக்கும். இந்த திட்டம் மாதம் ரூ.399 எனும் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாதாந்திர திட்ட ரீசார்ஜ்களை தேர்வு செய்ய விரும்பாத பயனாளர்களுக்கு இத்திட்டம் ஒரு நல்ல வாய்ப்பு. ரூ.1197 உடன் பயனர்கள் ஜிஎஸ்டி செலுத்தவேண்டும்.

இருந்தாலும் இத்திட்டம் ஓடிடி பலன்கள் ஏதும் வழங்கவில்லை என்பது சற்று பின்னடைவாக இருக்கிறது. ரூ.2997 ப்ரீபெய்ட் 150Mbps வேகம், அன்லிமிடெட் காலிங், டேட்டா வசதிகளை வழங்கும். மேலும் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஜியோ சினிமா உட்பட 16 வகையான ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்களின் நன்மைகளை பயனர் பெறலாம். இத்திட்டமும் 90 நாட்கள் செல்லுபடி ஆகும். இதேபோன்று ரூ.4497, ரூ.7497, ரூ.1,19,97 என பல திட்டங்களை JIO பைபர் வழங்குகிறது.