தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜி.தனஞ்செயன் நடிகர் விஜய் குறித்து வெளியிட்டுள்ள ஒரு கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், ரசிகர்களின் ஆரவாரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விஜய் வெறும் வசூல் மன்னன் மட்டுமல்ல, தயாரிப்பாளர்களையும் கோடீஸ்வரர்களாக்கும் மாபெரும் லாப நாயகன் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வரும் ஒரு பதிவில், நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய ஒவ்வொரு தயாரிப்பாளரும் குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரை நிகர லாபத்தைப் பார்த்துள்ளதாகத் தனஞ்செயன் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, தயாரிப்பாளர்களைப் பொறுத்தவரை விஜய் ஒரு ‘காட் மோட்’  போன்றவர் என்றும், தமிழ் திரையுலகில் பல கோடி ரூபாய் ஈட்டும் 20-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களை அவர் உருவாக்கியுள்ளதாகவும் அதில் சிலாகிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நிகழ்த்தும் தொடர்ச்சியான சாதனைகளும், வர்த்தக ரீதியிலான மிகப்பெரிய வெற்றியும் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பான முதலீட்டிற்கு உத்தரவாதம் அளிப்பதாகத் திரைத்துறையினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“>

 

தளபதியின் திரைப்பட வியாபாரம் எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பதை விளக்கும் இந்தப் பதிவு தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது.