Lenovo Tab M 10 HD டேப்லெட்டில் சிறந்த பார்வைக்காக லெனோவா 10.1 இன்ச் எச்டி டிஸ்ப்ளே கொடுத்திருக்கிறது. இதன் ஸ்கிரீன் உடல் விகிதம் 85% ஆகும். இவற்றில் 8MP பின்பக்க மற்றும் 5MP செல்பி கேமரா இருக்கிறது. இது தவிர்த்து இந்த டேப் MediaTek P22T செயலி டூயல் ஸ்பீக்கர்கள், ஃபேஸ் அன்லாக் மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 மணி நேர பேட்டரி ஆயுள் போன்றவற்றை பெறுகிறது. இந்த டேப்பை ரூபாய்.12,999 விலையில் வீட்டுக்கு கொண்டுவரலாம்.

Realme Pad டேப்லெட்டின் விலை ரூ.14,299 என்று நிறுவனம் நிர்ணயித்து உள்ளது. இது Realme Pad-ன் Wi-Fi மாடலாகும். மேலும் இது ஒரு பெரிய 10.4 அங்குல திரை, MediaTek Helio G80 செயலி மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7100mAh பேட்டரி போன்றவற்றை கொண்டு உள்ளது. அதோடு டேப்லெட்டில் 8MP முன் மற்றும் பின்புற கேமராக்கள் இருக்கிறது.

Nokia T20 டேப்லெட்டில் 10.4 இன்ச் 2K ரெசல்யூஷன் டிஸ்ப்ளேயானது இருக்கிறது. இதன் திரையானது 400 nits பிரகாசத்தினை ஆதரிக்கிறது. இந்த டேப்லெட்டில் Unisoc T610 சிப்செட் மற்றும் 8 MP பின்புற மற்றும் 5MP முன் கேமரா இருக்கிறது. இது தவிர்த்து டேப் 15W பாஸ்ட் சார்ஜிங்குடன் 8,200mAh பேட்டரியை பெறுகிறது. அதே சமயத்தில் இந்த நோக்கியா டேப்லெட்டை ரூபாய்.14,490க்கு வாங்கலாம்.

Samsung Galaxy Tab A8 டேப்லெட்டின் Wi-Fi மாடலின் விலையானது ரூ.14,999 ஆகும். இது ஒரு பெரிய 10.5-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் டால்பி அட்மோஸை ஆதரிக்குமாம். அத்துடன் குவாட் ஸ்பீக்கர்களை கொண்டு உள்ளது. டேப் ஆக்டா-கோர் செயலி உடன் 7,040mAh பேட்டரியை பெறுகிறது. இவை 15W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த டேப்லெட்டின் உள் சேமிப்பகத்தை 1TB வரையிலும் அதிகரிக்கலாம்.

Xiaomi வழங்கும் Redmi Pad டேப்லெட் ரூ.14,999 விலையில் விற்பனைக்கு வருகிறது. 3gp+ 64gp சேமிப்பு மாறுபாடு இந்த விலையில் கிடைக்கும். டேப்லெட்டில் 10.61 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது. மேலும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டு உள்ளது. இதில் MediaTek Helio G99 செயலி, 8MP பின்பக்க மற்றும் செல்பி கேமரா இருக்கிறது. இது தவிர்த்து 8000mAh ஜம்போ பேட்டரி டேப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது.