இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு 365 நாட்கள் செல்லுபடி ஆகும் பல ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது 336 நாட்கள் செல்லுபடி ஆகும் படி 895 ரூபாய்க்கு ஒரு ரீசார்ஜ் திட்டம் உள்ளது. இந்தத் திட்டத்தில் மொத்தம் 24 ஜிபி டேட்டா, வரம் பெற்ற அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும்.

ஆனால் இந்த திட்டத்தை ஜியோ போன் பயன்படுத்தும் பயனர்கள் மட்டுமே பயன்படுத்தலாம். அதாவது ஜியோ போன் வைத்திருந்து ஜியோ சிம் பயன்படுத்தக்கூடிய பயனர்களுக்கு மட்டுமே இந்த மிக மலிவான விலையில் அட்டகாசமான சலுகை வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மற்ற ஜியோ பயனர்களுக்கும் ஏகப்பட்ட சலுகைகளுடன் பல ரீசார்ஜ் திட்டங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.