பொதுவாகவே உணவுகளை விரும்பி சாப்பிடுவதற்காகவே பலரும் உயிர் வாழ்கின்றனர் என்றே கூறலாம். உணவு இல்லாமல் ஒன்றுமே இல்லை. ஒவ்வொரு ஊர் ஊராகச் சென்று உணவுகளை தேடி தேடி சாப்பிடுபவர்கள் பலரும் உள்ளனர். இந்த நிலையில் Taste Atlas என்ற இணையதளம் உணவு சம்பந்தமான ஆய்வுகளை நடத்தி அதற்கான பட்டியலை வெளியிடும்.

அந்த வரிசையில் உலகின் தலைசிறந்த உணவுகள் கொண்ட டாப் 100 நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவை சேர்ந்த ஐந்து நகரங்கள் இடம் பெற்றுள்ளன. மும்பை 35 வது இடத்தையும், ஹைதராபாத் 39 வது இடத்தையும், டெல்லி 56வது இடத்தையும், சென்னை 65 ஆவது இடத்தையும், லக்னோ 92 வது இடத்தையும் பிடித்துள்ளது.