கடந்த 14ஆம் தேதி, டெல்லியின் இந்திரலோக் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரீனா என்ற தாய் மெட்ரோ ரயிலில் ஏறியபோது, அவரது மகன் அவர் உடன் செல்லாமல் பிளாட்பாரம் – இல் நின்றுள்ளார். இதை கண்டதும் இறங்கும் முயற்சிக்க , ரீனாவின் சேலை மூடிய மெட்ரோ ரயில் கதவுகளில் சிக்கியது. பின் ரயில் நகர,   அவர் பிளாட்பாரத்தில் இழுத்து தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்க அவர் சிகிச்சை பலனின்றி உயிிழந்தார்.

கணவர் இறந்ததைத் தொடர்ந்து காய்கறி விற்று தனது 13 வயது மகள் மற்றும் 11 வயது மகனுக்கு ஆதரவாக இருந்த அவர் இறந்தது குடும்ப உறுப்பினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. டெல்லி மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையம் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கியது,  மெட்ரோ ரயில் நிர்வாகம், தில்லி மெட்ரோ ரயில் சட்டம், 2017 ன் படி,

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு மற்றும் மனிதாபிமான அடிப்படையில் ரூ.10 லட்சம் கூடுதலாக அறிவித்தது. ரீனாவின் குழந்தைகள் மைனர்கள் என்பதால், அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை சட்டப்பூர்வமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவை டெல்லி மெட்ரோ ஆணையம் ஏற்க உறுதியளித்துள்ளது.