ஜம்மு – காஷ்மீர் அரசின் கொள்கைகள் குறித்தும், திட்டவட்டங்கள் குறித்தும் அரசு ஊழியர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 17-ஆம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஜம்மு – காஷ்மீர் முதன்மை செயலாளர் ஏ.கே.மேத்தா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அப்போது அரசு ஊழியர்கள் சிலர் அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுபோன்ற ஊழியர்களின் சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணித்து அவர்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும் என முதன்மைச் செயலாளர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அனைத்து மாவட்ட நிர்வாகமும் அரசு ஊழியர்களை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அரசு ஊழியர்களுக்கு எதிராக பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதன்மை செயலாளர் ஏ.கே.மேத்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.