பான்கார்டு என்பது ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் தேவைப்படும் மிக முக்கிய ஆவணம் ஆகும். இதில் கார்டுதாரரின் பெயர், பாலினம், பிறந்ததேதி போன்றவை இருக்கிறது. இதனிடையே உங்களது பான்கார்டை நீங்கள் தொலைத்துவிட்டால் (அ) காணாமல் போனால் அந்த அட்டையின் நகல் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தகவல் தொழில்நுட்பத் துறையின் இ-பைலிங் போர்ட்டலில் இருந்து மின்னணு பான்கார்டு, இ-பான் அட்டை பதிவிறக்கம் செய்யலாம். உங்களது பான்கார்டு தொலைந்துவிட்டாலோ (அ) திருடப்பட்டாலோ உடனே உங்கள் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்து பான் எண்ணை மோசடியாக பயன்படுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்த, முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆர்) புகார் நகலை பெறவேண்டும்.