திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, வருகிற ஜனவரி 9-ஆம் தேதி முதல் தனது மாநில அளவிலான சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையிலான இந்தத் துணைக் குழு, முதற்கட்டமாக ஒசூரில் பொதுமக்களைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்க உள்ளது. மண்டல வாரியாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பயணத்தின் மூலம், நேரடியாகச் சென்று மக்களின் தேவைகளை அறிந்துகொள்ள திமுக முடிவு செய்துள்ளது.
ஒசூரில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் மட்டுமின்றி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச இந்தக் குழு திட்டமிட்டுள்ளது. தொழில்துறை வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளைத் தேர்தல் அறிக்கையில் முக்கியமாகச் சேர்க்கும் நோக்கில் இந்தக் கருத்துக்கேட்பு அமையும். இந்த நேரடிப் பயணம் மற்றும் செயலியில் வரும் ஆலோசனைகளை இணைத்து, மக்களின் எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் இறுதி அறிக்கை தயார் செய்யப்படும்.
