பஞ்சாப் மாநிலம் பட்டிண்டாவில், 15 நாட்களுக்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா மற்றும் தம்பி என இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் 12 வயது சிறுமி மர்மமான முறையில் இறக்க, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே 7 வயது தம்பி ஃபதேவீரும் மர்மமாக இறக்கவே, கிராம மக்களுக்கு சந்தேகம் எழுந்தது. ஊர் மக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அந்தப் பெற்ற தாயே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது இரண்டு குழந்தைகளையும் எலி மருந்து கொடுத்துக் கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

​இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட தாயின் மீது போலீசார் தற்போது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். தன் சொந்த ரத்தத்தையே காதலுக்காகப் பலி கொடுத்த இந்தச் சம்பவம் பஞ்சாப் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. கிராம மக்கள் திரண்டு வந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால்தான், இந்த மறைக்கப்பட்ட உண்மை வெளிவந்தது. ஒரு தாயே எமன் அவதாரம் எடுத்த இந்தச் சம்பவம், மனித நேயத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.