வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்ளும் வீடுகளுக்கு மாதம் தோறும் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கும் பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தை பிரதமர் மோடி பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 15,000 முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை ஒரே குடும்பத்தினரால் சேமிக்க முடியும். இந்த திட்டத்தின் கீழ் குடும்பத்தினருக்கு மத்திய அரசு மானியம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று கிலோ வாட் வரை ஒவ்வொரு கிலோ வாட்டுக்கும் 18 ஆயிரம் ரூபாய் மானியம் கிடைக்கும். மூன்று முதல் பத்து கிலோ வாட் வரை நிறுவினால் முதல் மூன்று கிலோ வாட்டுக்கு தலா 18,000 ரூபாயும், அதற்கு அடுத்த ஒவ்வொரு கிலோ வாட்டுக்கும் தலா 9000 மானியம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனுடைய https://pmsuryaghar.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.