எக்ஸ் (X) வலைதளத்தில் வெளியான காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த காணொளியில், அக்வாரியம் ஒன்றில் பெலுகா திமிங்கலங்கள் இருக்கும் பகுதிக்கு அருகே நபர் ஒருவர் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கிறார். விலங்குகள் இருக்கும் இடத்தில் புகைப்பிடிக்கக் கூடாது என்று அங்கிருந்த ஊழியர்கள் எவ்வளவோ தடுத்தும், அந்த நபர் அவர்களின் எச்சரிக்கையைத் துளியும் மதிக்காமல் அலட்சியமாகச் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்.

​யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்தப் பெலுகா திமிங்கலம் திடீரெனத் தண்ணீருக்கு அடியில் இருந்து மேலே பாய்ந்து வந்தது. மின்னல் வேகத்தில் அந்த நபரின் முகத்தை நோக்கி ஒரு ஜெட் வேகத்தில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தது. அந்தத் தண்ணீர் நேராக அவர் கையில் இருந்த சிகரெட்டின் மீது பட்டு, அது உடனே அணைந்து போனது. ஊழியர்கள் சொல்லியும் கேட்காத அந்த நபரை, ஒரு வாய் தண்ணீர் மூலமாக அந்தப் பெலுகா அடக்கிய விதம் அங்கிருந்தவர்களை வியக்க வைத்தது. “இயற்கையை மதிக்காதவர்களுக்கு இயற்கை இப்படித்தான் பாடம் புகட்டும்” என்று இந்த வீடியோவை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.