சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, வியாபார நுணுக்கத்தின் புதிய உச்சத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. பிளாஸ்டிக் டப்புகளை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர், தனது தயாரிப்பு எவ்வளவு வலுவானது என்பதை நிரூபிக்க வாடிக்கையாளர்கள் முன்னிலையில் நேரடி சோதனையில் (Live Testing) ஈடுபடுகிறார். முதலில் ஒரு பெரிய பாறாங்கல்லைக் கொண்டு அந்த டப்பை ஓங்கி அடிக்கிறார்; பிறகு தரையில் போட்டுப் படாதபாடு படுத்துகிறார். இத்தோடு நிறுத்தாமல், சாலையில் வேகமாக வரும் ஒரு பேருந்தின் டயருக்கு அடியில் அந்த டப்பைத் தூக்கி வீசுகிறார்.

​பேருந்து அந்த டப்பின் மீது ஏறிச் சென்ற பிறகும், அது உடையாமல் வெறும் நசுக்கலோடு மட்டுமே இருக்கிறது. மீண்டும் அந்த நசுக்கல்களைச் சரி செய்து, பழைய நிலைக்குக் கொண்டு வந்து காட்டி வாடிக்கையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறார் அந்த வியாபாரி. ‘trendy_londaaa’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இது பிளாஸ்டிக் டப்பா இல்ல இரும்பு டப்பா?” என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த அதிரடி மார்க்கெட்டிங் ஸ்டைல் பலரையும் அந்தப் பொருளை வாங்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.