தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவர் சமீபத்தில் நடிகர் பவன் கல்யாண் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தன்னுடைய ஜாதியின் பெயரை சொல்லி பெருமையாக பேசினார். நடிகர் பார்த்திபன் தன் மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசும் நிலையில் தவறாக நடக்கும் விஷயங்களுக்கு எதிராக குரல் கொடுப்பார்.
இதன் காரணமாக அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் மற்றும் நல்ல பெயர் இருக்கும் நிலையில் ஜாதி பெருமை பேசியதால் சர்ச்சை ஏற்பட்டதோடு பார்த்திபனை பலரும் விமர்சிக்க ஆரம்பித்தனர். இதன் காரணமாக நடிகர் பார்த்திபன் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்த நிலையில் தற்போது ஒரு அதிரடி முடிவையும் எடுத்துள்ளார்.
அதாவது ஜாதியே வேண்டாம் என்று பார்த்திபன் முடிவு செய்துள்ள நிலையில் No caste No religion எனும் அரசாங்க சான்றிதழை பெறுவதற்கு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருவதாக வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். இதனை தற்போது பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில், சான்றிதழ் வைத்திருந்தால் போதாது.
அதனை செயலில் காட்ட வேண்டும். சாதி பெருமை மற்றும் பெண்களை தவறாக பேசுவதும் பின்னர் வருத்தம் தெரிவிப்பதும் மன்னிப்பு கேட்பதும் எடுபடாது என்று பதிவிட்டுள்ளார். மேலும் முன்னதாக நடிகர் விஜய் விவகாரத்தில் த்ரிஷாவை அவர் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
