மகாராஷ்டிரா மாநிலத்தின் கொங்கண் பகுதியில் கனமழை பெய்து வருவதால், முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, மும்பை-கோவா நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள ஆழமான பள்ளங்கள், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பயணிக்கின்ற பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றன. பயணிகள் வேகமாக செல்ல முடியாத அளவுக்கு பள்ளங்கள் உருவாகியுள்ளதால், போக்குவரத்து நெரிசலும், சாலையில் பாயும் வெள்ளமும் கடுமையாகும் நிலையில் உள்ளது.

இதை மையமாக கொண்டு சமூக ஊடகங்களில் பலர் பதிவிட்டுள்ளனர்க, ரத்னகிரி பகுதியைச் சேர்ந்த ஒருவர், “சொர்க்கம் போல சாலை கொடுத்ததற்கு நன்றி!” எனக் கடும் கேலி செய்துள்ளார். அவரது கிண்டல் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

“>

 

இதற்கிடையில், சிப்லுன் பகுதியில் வசிஷ்டி பாலத்திற்கு அருகில் சந்திரனை ஒத்த பள்ளங்களை காண்பிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அதற்கு பதிலளித்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), அந்த சாலை தங்கள் கட்டுப்பாட்டில் இல்லையென்று தெரிவித்துள்ளது.

“>

 

அது மாநில அரசின் பொதுப்பணித்துறை (PWD) மூலம் பராமரிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது. இந்த மும்பை-கோவா நெடுஞ்சாலை திட்டத்தின் செலவு கடந்த 14 ஆண்டுகளில் ரூ.3,500 கோடியில் இருந்து ரூ.7,300 கோடி வரை உயர்ந்துள்ளதுடன், சமீபத்திய மழையால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சாலைத் திட்டத்தில் ஏற்பட்ட தாமதம், பராமரிப்பு குறைபாடு மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக, பண்டிகை நாட்களில் கூட மக்கள் கடுமையான நெருக்கடியில் சிக்கி வருகிறார்கள் என்பது கவலைக்கிடமானதாகும்.