தமிழக அரசியலில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஒரு சம்பவமாக, ஏலத்திற்குப் போன ஏழைப் பெண்ணின் தாலிச் சங்கிலியை மீட்டுக் கொடுத்ததோடு, கூடுதல் எடையில் புதிய தாலியையும் வாங்கிக்கொடுத்து தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலையைச் சந்தித்த அந்தப் பெண், வறுமை காரணமாக அடகு வைக்கப்பட்ட தனது தாலிச் சங்கிலி ஏலத்திற்குச் சென்றுவிட்டதாகவும், அதை மீட்க வழிதெரியாமல் தவிப்பதாகவும் கண்ணீர் மல்கக் கோரிக்கை வைத்தார்.
அந்தப் பெண்ணின் நிலையைக் கண்டு உடனடியாக உதவ முன்வந்த அண்ணாமலை, அடுத்த நாளே அந்தப் பெண் இழந்த தாலியை விட அதிக எடையுடன் கூடிய புதிய தங்கத் தாலிச் சங்கிலியை அன்பளிப்பாக வழங்கினார்.
ஏலத்துக்கு போன அடகு நகையான தாலியை மீட்டு தரக்கோரி அண்ணாமலையிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த பெண்..! அடுத்த நாளே அதை விட அதிக எடையுடன் கூடிய புதிய தாலியை வாங்கி கொடுத்த அண்ணாமலை..!!#Annamalai | #BJP | #Woman | #PolimerNews pic.twitter.com/b45VgRN6Qx
— Polimer News (@polimernews) March 3, 2026
“>
அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கி வந்தாலும், ஒரு ஏழைப் பெண்ணின் வாழ்வாதாரப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்த அண்ணாமலையின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
