சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மைக்காலமாகப் பொதுக்கூட்டங்கள் மற்றும் கல்வி விருது வழங்கும் விழாக்களில் பேசி வரும் விதம் பேசுபொருளாகி உள்ளது.

இந்நிலையில், இது குறித்து  பேசிய நடிகர் சத்யராஜ், “நிஜ வாழ்க்கையில் மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடாமல், மேடையில் ஏறி வசனம் பேசுவதெல்லாம் வெறும் வெட்டி உதார்; இதை எல்லா நடிகர்களுமே செய்வார்கள், இதற்கெல்லாம் பெரிய வித்தை தேவையில்லை” என மறைமுகமாக விஜய்யைச் சாடியுள்ளார்.

“>

 

திரையில் புரட்சிகரமான வசனங்கள் பேசுவது எளிது, ஆனால் களத்தில் இறங்கி வேலை செய்வதுதான் கடினம் என அவர் குறிப்பிட்டது, நேரடியாக விஜய்யின் அரசியல் வருகையைக் குறிவைப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். விஜய்யின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், சத்யராஜின் இந்தத் தாக்குதல் தவெக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.