புனே நகரில் நள்ளிரவு 3 மணியளவில் தம்பதி ஒருவர் தங்களது வீட்டின் பால்கனியிலேயே எதிர்பாராத விதமாக பூட்டிக்கொண்ட வினோதமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தூக்க கலக்கத்தில் பால்கனிக்கு வந்த அவர்கள், கதவு தானாகவே லாக் ஆனதை உணராமல் சிக்கிக்கொண்டனர்.

மேலும் கைபேசி உள்ளிட்ட எந்த தொடர்பு சாதனங்களும் கையில் இல்லாத நிலையில், உதவிக்காக அவர்கள் அலறியும் யாருடைய கவனத்தையும் ஈர்க்க முடியவில்லை. இறுதியில், பெரும் போராட்டத்திற்குப் பிறகு ஒருவழியாக மீட்கப்பட்ட இந்த முழு சம்பவத்தையும் அந்த நபர் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mihir Gahukar (@mihteeor)

“>

இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் தங்களது சிரிப்பை அடக்க முடியாமல் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “இது பார்ப்பதற்கு ஒரு திரில்லர் படம் போல இருந்தாலும், இறுதியில் நகைச்சுவையாக முடிந்துவிட்டது” என்று பலர் பதிவிட்டுள்ளனர்.

அதே சமயம், இதுபோன்ற சூழல்களில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், கதவுகளின் லாக் அமைப்புகளைச் சரிபார்க்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்து இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.