ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் ரஷித் கான், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சனுடன் மேற்கொண்ட நேர்காணலில் தனது பாதுகாப்பு குறித்து சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளைப் பகிர்ந்துள்ளார். ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் காரணமாக, தன்னால் அங்கு சுதந்திரமாகச் சாலைகளில் நடமாட முடியாது என்றும், தனது பாதுகாப்பிற்காக எப்போதும் குண்டு துளைக்காத காரை மட்டுமே பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காபூல் வீதிகளில் சாதாரணமாக ஒரு காரில் செல்வது கூட பாதுகாப்பற்றது என்பதால், இந்தத் தற்காப்பு நடவடிக்கையை மேற்கொள்வதாக அவர் உருக்கமாகக் கூறியுள்ளார். தனது குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து ரஷித் கான் மிகுந்த கவலையில் இருப்பதாகவும், அவர்களை அங்கிருந்து வெளியேற்ற முடியாமல் தவித்து வருவதாகவும் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

“>

இதுபோல சொந்த நாட்டில் ஒரு சர்வதேச விளையாட்டு வீரருக்கே இத்தகைய நிலை இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டான இந்தச் சூழலிலும் மைதானத்தில் சிறப்பாக விளையாடி வரும் ரஷித் கானின் மன உறுதியை பீட்டர்சன் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்த நேர்காணலின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.