மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பெற்ற பிள்ளைகளே தங்களின் வயதான தாய் மற்றும் தந்தையைச் சொத்துக்காகவும் நிலத்திற்காகவும் நடுரோட்டில் வைத்துத் தடியால் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றெடுத்து, ஆளாக்கி, அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த பெற்றோரை, வயோதிக காலத்தில் கண்முன்னே வைத்துப் பாதுகாக்க வேண்டிய இரத்த சொந்தங்களே இப்படி மிருகத்தனமாக வீதியில் வைத்துத் தாக்கியுள்ள நிகழ்வு மனிதநேயத்தின் வீழ்ச்சியைக் காட்டும் கொடூர சான்றாக அமைந்துள்ளது.
இந்நிலையில் சொத்து மற்றும் நிலப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில், பெற்ற பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் சிலர் சேர்ந்து, அந்த முதிய தம்பதியைச் நடுரோட்டில் வைத்து விவரிக்க முடியாத அளவுக்குத் தடிகளால் தாக்கியுள்ளனர். வலியால் அலறித் துடித்த அந்த முதியவர்கள் தங்களைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்ட போதிலும், சிறிதும் இரக்கமின்றித் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தியுள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவத்தின் அதிர்ச்சி அளிக்கும் காணொளிப் பதிவு தற்போது வெளியாகி, சமூக வலைத்தளங்களில் பரவி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு, பெற்றோரைக் கொடூரமாகத் தாக்கிய பிள்ளைகள் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வயதான காலத்தில் ஆதரவாக இருக்க வேண்டிய பிள்ளைகளே, வெறும் நிலத்திற்காகப் பெற்ற தாய்-தந்தையை வீதியில் போட்டு அடித்து நொறுக்கிய இந்தச் சம்பவம், மகாராஷ்டிராவையே உறைந்து போகச் செய்துள்ளதுடன், இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
See this Instagram video by @sakalmedia https://t.co/I53xnKGuN1
“>
