சேரி மொழி விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ சென்னை விமான நிலையத்தில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சேரி என்ற பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது. எனக்குத் தெரிந்த மொழியில் நான் பேசுவேன்.

வேளச்சேரி என்ற ஊர் பெயர்களிலும் சேரி என்ற பெயர் உள்ளது. எந்த இடத்திலும் நான் தகாத வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. என் வீட்டின் முன்பு போராட்டம் நடத்த வருவதாக கூறினார்கள் ஆனால் இதுவரை யாரும் வரவில்லை, அவர்களுக்காக நான் காத்திருக்கிறேன் என்று குஷ்பூ தெரிவித்துள்ளார்