சென்னை சாலிகிராமம் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருவேற்காடு பகுதியை சேர்ந்த சிராஜுல் இஸ்லாம் என்ற வாலிபரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நிலையில் காதலனின் நடவடிக்கை பிடிக்காமல் இளம் பெண் அடிக்கடி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே சண்டைகள் அடிக்கடி நடந்துள்ளது.
இந்த நிலையில் அந்த இளம் பெண் வாலிபரை விட்டு பிரிந்து செல்வதாக கூறிய நிலையில் அவர் இருவரும் ஒன்றாக இருந்த அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக கூறி மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க அவர்கள் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். மேலும் அந்த வாலிபரின் செல்போனையும் அவர்கள் பறிமுதல் செய்த நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
